எம் ஊர்!
பகலெல்லாம் நினைவுகளாகவும்
இரவெல்லாம் கனவுகளாகவும்
கழிகிறது நம் வாழ்க்கை!
இடம் மாறி விட்டோம்,
உரு மாறி விட்டோம்,ஆனாலும்
எம் மனம் மாறவில்லை.
எம்மை இன்னும் ஆழ்கிறது
அந்த ஊர்!
அதுதான் எம் சொந்த ஊர்!
|
|
comments (0)
|
யாழ்ப்பாணத்தில் நேற்று வெவ்வேறு பிரதேசங்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தெல்லிப்பளை வடக்குப் பகுதியிலுள்ள வெற்றுக் காணியில் நின்ற பனை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார், சுதாகரன் கிருஸ்ணபவானி (வயது 34) என்ற பெண்ணின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பெண்ணுக்கு 5 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தற்போது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெல்லிப்பளைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ். வசாவிளான் சுதந்திரபுர பகுதியில் தீயில் கருகிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சடலத்தில் தீக்காயங்கள் பல காணப்படுவதாகவும் இவரது மரணம் எவ்விதம் சம்பவித்தது என்பது தொடர்பாக உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 24 வயதான அர்ச்சுனன் தயாநிதி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவரது மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|
comments (0)
|
மட்டக்களப்பு நகரிலுள்ள தேவநாயகம் கூட்டுறவு மண்டபம் தீப்பிடித்துள்ளது. இந்த மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிறு தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை இம்மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீயை அணைப்பதற்காக மட்டக்களப்பு மாநகரசபைக்கு சொந்தமான தீயணைக்கும் வாகனம் அங்கு சென்றுள்ளதாக நமது மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். மண்டபத்திற்குள் இருந்த திரைச்சீலை மற்றும் தளபாடங்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மகாநாட்டை குழப்பும் வகையில் பிள்ளையான் குழு அல்லது இராணுவ புலனாய்வு பிரிவினர் இம்மண்டபத்திற்கு தீவைத்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். மண்டபத்திற்குள் இடம்பெற்றிருக்கும் இத்தீ வைப்பு சம்பவம் சில தீய சக்திகளின் வேலையாக இருக்கும் என சிலர் தெரிவிக்கின்றனர். எனினும் இத்தீவிபத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.
|
|
comments (0)
|
காலி - ஹக்கடுவை பகுதி ஹோட்டல் ஒன்றில் 17 வயது தமிழ் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு சவுதிஅரேபிய பிரஜைகளும், பெண்களை பணத்திற்கு விற்ற குற்றத்தில் இலங்கைப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸாரால் இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
|
|
comments (0)
|
பண்டத்தரிப்பு, பிரான்பற்று ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே 250 இற்கும் அதிகமான ஆட்டுக்கடாக்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. வருடந்தோறும் பண்டத்தரிப்பு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெறும் வேள்வியிலேயே இந்தமுறையும் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டுள்ளன. ஆலய வேள்விக்காக அதிகாலை முதலே டிறாக்டர், லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டிகளில் நீராட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் ஆட்டுக்கடாக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டன. மனிதனின் தேவைக்காகப் படைக்கப்பட்ட பொருள்களில் ஆட்டுக்கடாவும் ஒன்று. எனவே இறைவனின் சந்நிதானத்தில் பலியிடுவதால் மோட்சநிலைக்குச் செல்லும் வாய்ப்பு அவற்றுக்கு ஏற்படும் என்று ஆலய பூசகரால் அருள்வாக்குக் கூறப்பட்ட பின்னர் வேள்வி ஆரம்பமானது.. ஆட்டுக்கடாக்களின் தலைகள் ஒரே வெட்டில் அறுக்கப்பட்டன. இரத்தம் கொப்பளிக்க அவை நிலத்தில் வீழ, தொடர்ந்தும் காத்திருந்த ஆடுகள் பலியிடப்பட்டன. கூடவே 72 கோழிகளும் இதன்போது பலியிடப்பட்டன. வேள்வியின் போது பலியிடப்பட்ட முதல்நிலையான ஆடுகள் இரண்டு லட்சம் ரூபா வரை விலை போயின. ஓர் ஆட்டினைப் பலியிடுவதற்கு ஆலயத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணமும் செலுத்தப்பட்டது. வேள்வியைத் தொடர்ந்து பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றன. பிரான்பற்றைத் தொடர்ந்து ஆனைக்கோட்டை, கவுணாவத்தை, சித்தன்கேணி, நவாலி போன்ற இடங்களிலுள்ள ஆலயங்களிலும் மிருக பலியிடல் நிகழ்வுகள் அடுத்துவரும் வாரங்களில் நடைபெறவுள்ளன.. இதேவேளை, ஆலயங்களில் இவ்வாறு மிருக பலியிடலை மேற்கொள்வதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. நாவலர் வழியில் சைவநெறி தவறாது வாழ வேண்டிய நாம் இன்று சைவக்கோயில்களில் வேள்வி என்ற பெயரால் மிருகபலி செய்வது எமது சமயத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் இந்த மிருக பலியை கண்டித்துள்ளது.. இந்து அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி குறித்த ஆலயங்களில் தொடர்ந்தும் மிருக பலியிடல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
|
|
comments (0)
|
திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் ராணுவ வீரர். கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இங்குள்ள வீட்டில் மனைவி, மகள் மற்றும் சுதனின் தந்தை ஆகியோர் வசித்து வந்தனர். சுதனின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த வாலிபர் நள்ளிரவு நேரத்தில் சுதன் வீட்டுக்கு வந்து சென்றார். இதை அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் சுதன் வீட்டுக்கு செல்லும் நபரை பிடிக்க காத்திருந்தனர். நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு வழக்கம்போல அந்த வாலிபர் சுதன் வீட்டுக்கு சென்றார். பின்புற கதவை சுதனின் மனைவி திறந்ததும் அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். இதை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் சுதன் வீட்டின் பின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர். பின்னர் வீட்டின் முன்புறம் சென்று கதவை தட்டி உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்தனர். அப்போது வீட்டினுள் சுதனின் தந்தை கதவை திறந்து வெளியே வந்தார். அங்கு அக்கம்பக்கத்தினர் திரண்டு நிற்பதை கண்டு விவரம் கேட்டார். அவர்கள் சுதனின் மனைவியுடன் வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் ரகசியமாக தங்கி இருப்பதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுதனின் தந்தை உள்ளே சென்று பார்த்தார். அங்கு மருமகளுடன் இன்னொரு வாலிபர் தனிமையில் இருப்பதை கண்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மார்பை பிடித்தபடி நாற்காலியில் சாய்ந்த அவர் அதே இடத்தில் இறந்தார். ஊர் மக்கள் வீட்டுக்குள் புகுந்து சுதனின் மனைவியையும், அந்த வாலிபரையும் பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அந்த வாலிபருக்கு அவர்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பிடித்து விசாரித்ததோடு அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி ராணுவ வீரர் சுதனுக்கும் தகவல் கொடுத்தனர். அவரது தந்தை இறந்து போனதையும் கூறினர். அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். இன்று இரவு அவர் ஊர் திரும்புவார் என தெரிகிறது. இதற்கிடையே சுதனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரோடு இருந்த வாலிபரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
|
|
comments (0)
|
2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப் பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறீலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.
இதேவேளை மேற்படி துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தகவல் வெளியிட்டார்.
அவர் மேலும் தகவல் தருகையில் 2000ஆம் ஆண்டில் 600 சிறுமிகளும் 320 பெண்களுமாக 928 பேரும், 2001இல் 685 சிறுமிகளும் 395 பெண்களுமாக 1080 பேரும், 2003இல் 714 சிறுமிகளும் 333 பெண்களுமாக 1047 பேரும் 2003இல் 753 சிறுமிகளும் 409 பெண்களுமாக 1162 பேரும் 2004இல் 930 சிறுமிகளும் 362 பெண்களுமாக 1292 பேரும் 2005இல் 793 சிறுமிகளும் 460 பெண்களுமாக 1253 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2006இல் 799 சிறுமிகளும் 353 பெண்களுமாக 1152 பேரும் 2007இல் 805 சிறுமிகளும் 346 பெண்களுமாக 1151 பேரும் 2008இல் 914 சிறுமிகளும் 303 பெண்களுமாக 1217 பேரும் 2009இல் 922 சிறுமிகளும் 279 பெண்களுமாக 1201 பேரும் 2010இல் 1089 சிறுமிகளும் 235 பெண்களுமாக 1324 பேரும் 2011ஆம் ஆண்டில் 1160 சிறுமிகளும் 281 பெண்களுமாக 1450 பேரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர்.
இதன்படி 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் சிறுமிகள் மற்றும் பெண்கள் என 14,257 பேர் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதேவேளை 2000ஆம் ஆண்டில் 1557 சிறுவர்களும், 2001இல் 1370 சிறுவர்களும் 2002இல் 143 சிறுவர்களும் 2003இல் 1762 சிறுவர்களும் 2004இல் 2896 சிறுவர்களும் 2005இல் 2824 சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்குட்பட்டுள்ள அதேவேளை 2006இல் 2355 சிறுவர்களும் 2007இல் 2624 சிறுவர்களும் 2008இல் 3196 சிறுவர்களும் 2009இல் 2954 சிறுவர்களும் மற்றும் 2010இல் 4029 சிறுவர்களும் என மொத்தமாக 27,023 சிறுவர்கள் இக்காலப்பகுதியில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்கான தரவுகள் இங்கு தரப்படவில்லை.
சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமை பெற்றோரின் கவனிக்குறைவு, பொருளாதார பலவீன நிலைமை, சிறுவர்களின் அறிவீனம் பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகள், உழைப்பில் ஈடுபடுத்தல். தாய் வெளிநாடு செல்லல். பெற்றோர் கல்வியறிவின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்றனர்.
அதேபோன்று கல்வி மட்டம் குறைதல், கையடக்க தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்கள் , மதுபானம் , போதைவஸ்து உபயோகம், தனிமைப்படுத்தப்பட்டிருத்தல், சிறிய சூழலில் அநேகர் இணைந்து வாழ்தல், பாலியல் ஊக்குவிக்கும் வகையில் நவீன சமூகத்தில் பலதரப்பட்ட விடயங்களை உருவாக்கியிருத்தல். பெற்றோர் அதிக நேரத்தை தொழிலுக்காக செலவிடுதல் உள்ளிட்ட காரணங்களினாலேயே பெண்களும் சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்ற நிலைமை உருவாகின்றது.
இதனைத் தடுப்பதற்கென பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஆபாச இறுவெட்டுக்கள் (சீடிக்கள்
விற்பனை நிலையங்களை சுற்றிவளைத்தல், இணையத்தளம் ஊடாக இயங்கி வருகின்ற ஆபாச தளங்களை தடை செய்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுத்தல் குற்றவாளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டனையைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.
|
|
comments (0)
|
கம்பளை நகரில் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத சிலர் அங்கிருந்த பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். இதன்போது, சுமார் 23 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், 18,000 ரூபா ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக கம்பளை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கம்பளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்தகரின் மூன்று மாடிகளைக்கொண்ட வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் இரண்டாம் மாடியின் பின்புற கதவினால் உட்புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும், கம்பளை காவல்துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடத்தியபோதிலும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது..
|
|
comments (0)
|
ஆள் மாறாட்டம் செய்து போலியான பெயரில் யுவதியொருவரை திருமணம் செய்த பிக்கு ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட யுவதிக்கு தன்னை மணம் முடித்தவர் மீது சந்தேகம் எழவே அது குறித்து தேடிப் பார்த்ததுடன் அதனை உறுதியும் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். புகாரின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் பௌத்த பிக்கு என்பதும் போலியான பெயரில் ஆள்மாறாட்டம் செய்து மேற்படி யுவதியை திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
|
|
comments (0)
|
மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த சகோதரிகளான இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். 4 வயதும், 6 வயதுமான இரு சகோதரிகளை தாயர் பாத்துக் கொள்ளுமாறு சொல்லி அயல் வீட்டுக்கரர் ஒருவரிடம் ஒப்பதைடத்துவிட்டு கடை ஒன்றுக்கு சென்றுள்ள வேளை குறித்த நபர் இரு சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மங்குளம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொண்கள் நோயியல் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு சகோதரிகளான இரு சிறுமிகளும் யாழில் மருத்துவப்பரிசோதனைக்கு உப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
|
|
comments (0)
|
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் அருகிலுள்ள சான் டியாகோ கல்லூரி மாணவர் ஒருவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர் பிருப்பதாக தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரை காவல்துறையினர் அங்கு மறந்துவிட்டுவிட்டதால் 5 நாட்கள், குடிநீர், உணவு இன்றி, தனது சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளனார். இறுதியாக மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஜெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் எப்படி அந்த மாணவனை மறந்தார்கள் என்றே தெரியவில்லை. கவனக்குறைவாக நடந்த அனைத்து சிறை அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை என மேலும் அவர் கூறினார். மேலும் மருத்துவச்செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
|
|
comments (0)
|
யாழ். சுதுமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை 9.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பி யினால் சுடப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த புதன் கிழமை இரவு வேலைக்குச் சென்று விட்டுச் சுதுமலையில் தனது வீடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் நடுவீதியில் ஆட்டோ ஒன்றில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டுப் பிறிதோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு நெருப்புக் கம்பியால் சுடப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தாக்கப்பட்டவர் தகவல் தருகையில், தான் தனது சைக்கிளில் செல்லும் போது தன்னை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் என்னை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். ஓட்டோ சுமார் 30 நிமிடம் வரை பயணித்த பின்னர் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. ஓட்டோவில் ஏற்றும் போதே என் கண்கள் கட்டப்பட்டது. இதனால் நான் எங்குகொண்டு செல்லப்பட்டேன் என்பது தெரியாது. அது நின்றவுடன் என்னைத் தாக்கியதோடு நெருப்புக் கம்பியால் சுட்டனர். பின்னர் மீண்டும் ஓட்டோவில் ஏற்றி என்னை பழைய இடத்துக்குச் சமீபமாக இறங்கிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் சுதுமலை வடக்கு மானிப்பாயை சேர்ந்த வேதாபரணம் ரமேஸ் (வயது28) என்பவரே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் யாழ் மனித உரிமை கண்காணிப்புக்குழு இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்று மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றிரவு தெரிவித்தனர்.
|
|
comments (0)
|
யாழ்ப்பாண வீதியில் சென்ற இளம்பெண்ணை அச்சுறுத்தி அவரின் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றத்திற்காக “கச்சான் ரவி” என்பவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச விதித்து தீர்பளித்துள்ளார்.கடந்த 2009.11.14 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் வைத்து வீதியில் சென்ற இளம் பெண் ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 55,000 ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துள்ளார்
இவர் பல குற்றச் செயல்கள் தொடர்பாக யாழ்.சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சிறையிலிருந்து விடுதலையான கையோடு பெண்ணை அச்சுறுத்தி தங்கச் தங்கிலியை அபகரித்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். பின்னதாக இவர் குற்றவாளி என இனம் காணப்பட்டதை இடுத்து இவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.
|
|
comments (0)
|
மக்கள் தொடர்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
யின் களனி அமைப்பாளருமான மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் களனி பிரேசத்தின் பழைய கண்டி வீதியில் அந்தக் கட்சியின் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
ஜிமல்கா, ஆன் ஆகியோருக்குச் சொந்தமான வீடே தற்போது ஶ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமாக உருமாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் செயற்பட்டு வந்தனர்.
இவர்களது தந்தை 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய இளைஞர், யுவதிகள் பலரை களனி பிரதேசத்தில் கொலை செய்த சம்பவத்துடனும் தொடர்புபட்டிருந்தார்.
”ஜிமல்கா மற்றும் ஆன்” ஆகிய இருவரும் கடந்த காலத்தில் குறித்த வீட்டை விலைமாதர் விடுதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த விலை மாதர் விடுதிக்கு அமைச்சர் மேர்வின் சில்வாவினால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து குறித்த வீட்டின் ஒரு பகுதி தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக வீட்டின் ஒரு பகுதியில் விலைமாதர் விடுதியை உத்தியோகபூர்வமாக நடத்திச் செல்வதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா அனுமதியளித்துள்ளார்.
|
|
comments (0)
|
இலங்கையில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
நிர்ப்பீடன குறைப்பாட்டு அறிகுறிகளை கொண்டவர்களின் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி இணைவதாக மருத்துவ தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மாநாடு அண்மையில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் நிமல் எதிரிசிங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அதுதவிர, 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுடன் பிறந்துள்ளனர்.
இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கு தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் ஆகியன காரணமாக பரவியதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தில் ராகம மருத்துவமனையில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.. இந்த வருடத்தின் முதல் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
|
|
comments (0)
|
வவுனியா நெடுங்கேணி குழவிசுட்டான் வேலங்குளம் பகுதியில் மாணவி ஒருவரை இராணுவப்புலனாய்வாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தமுற்றட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 10.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
மாணவியின் வீட்டிற்கு நேராக இராணுவ முகாம் ஒன்று இருப்பதாகவும், வீட்டில் இருந்து சிறுமியின் தங்கையும் மாமனாரும் வெளியே செல்வதை அவதானித்த குறித்த நபர் அந்த வீட்டிற்குள் நுழைந்து பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற பாணியில் செயற்பட்டதன் பின்னர் குறித்த மாணவி மீது பாலியல் வல்லுறவுக்கு உட்பட முற்பட்டிருக்கின்றார்.
பின்னர் அயலவர்களால் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் குறி்த்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தாகவும் நெடுங்கேணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய வயதிலேயே அவரது தந்தையை இழந்திருப்பதாகவும் தாய் அரபு நாடு ஒன்றில் பணியாற்றிவருகின்ற நிலையில் மாமனார் ஒருவருடனேயே குறித்த மாணவி வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
அண்மையிலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாணவி தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சம்பவம் தொடர்பில் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று படைத்தரப்பால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.